இன்று முதல் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

விவசாயிகளுக்கான இலவச எரிபொருளுக்கான டோக்கன் இன்று முதல் வளங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீட்டர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது.

இந்நிலையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அதன்படி இன்று முதல் அனைத்து விவசாயிகளும் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.  

Previous articleயாழில் தனியார் பஸ் நடத்துனரால் சொகுசு பஸ் நடத்துனர் மீது தாக்குதல்
Next articleபாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் கூறியுள்ள விடயம்