பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் கூறியுள்ள விடயம்

பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் ர் சுசில் பிரேம ஜயந்த கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியாளர் சந்திப்பொன்றில் இது குறித்து கேள்வி எழுப்பியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு தொழிற்கல்வியை வழங்கும் நோக்கில் அது குறித்த நிறுவங்களுடன் இணைந்து செயற்ப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் காணப்படும் தொழில் தேவைகளுக்கு ஏற்ப பிள்ளைகளை தொழில் கல்வி ஊடாக தகுதி உடையவர்களாக மாற்ற பெற்றோர் ஊக்குவிப்பு வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleஇன்று முதல் விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பம்
Next articleயாழில் விபத்தில் காயமடைந்த  இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!