யாழில் விபத்தில் காயமடைந்த  இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த  இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு – நீர்வேலியைச் சேர்ந்த 23 வயதுடைய இரத்தி னேஸ்வரன் பாவிதான் என்பவரே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் குறித்த விபத்து கடந்த  23ஆம் திகதி மானிப்பாயில் இருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கோப்பாய் கிருஷ்ணன் கோயிலுக்கு அருகாமையில், முன்னால் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காரின் பின் பகுதியுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்துள்ளார்

மயக்கமடைந்த இளைஞன் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .விபத்தை ஏற்படுத்திய கார் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை பொலிஸார் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleபாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் கூறியுள்ள விடயம்
Next articleவவுனியாவில் மருமகனை தாக்க முற்பட்ட வேலை தலையில் பலத்த காயமடைந்த மாமியார்க்கு நேர்ந்த சோகம் !