வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 20 பேர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !

வியட்நாமில் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பயணித்த போது படகு பழுதடைந்ததால் அங்கு சிக்கியுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு அவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை வழங்கி வருவதாக மனிதவள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் அவர்களின் அன்றாட தேவைகளை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், இலங்கைக்கு திரும்புவதற்கு உடன்படாத 130 பேர் சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் ஊடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விவகாரத்தில் UNHCR மற்றும் IOM உடன் இணைந்து செயல்படுகிறது.

Previous articleஅமைச்சரவையில் இடம்பெற இருக்கும் புதிய நியமனங்கள்
Next articleமட்டக்களப்பில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி !