மட்டக்களப்பில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி !

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (01) இரவு 8.15 மணியளவில் புறப்படவிருந்த புகையிரதத்தின் சிற்றுண்டிச்சாலை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, ​​பயணிகளுக்கு விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை சுகாதாரத் திணைக்களம் கண்டறிந்தது.

கரப்பான் பூச்சிகள் உணவுப் பொருட்களில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், விற்பனை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Previous articleவியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களில் 20 பேர் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு !
Next articleவைத்தியசாலை வந்த நோயாளியின் தலையின் மீது கழன்று வீழ்ந்த மின் விசிறி !