வைத்தியசாலை வந்த நோயாளியின் தலையின் மீது கழன்று வீழ்ந்த மின் விசிறி !

வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற இருவர் மீது மின் விசிறி விழுந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புற்றுநோய்க்கான மருத்துவ பரிசோதனைக்காக சென்ற இரு நோயாளிகளுக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இருவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய நபரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமட்டக்களப்பில் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி !
Next articleபாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் கொழும்பு -வசந்த முதலிகே