இன்று முதல் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச எரிபொருள் ? வெளியான முழு விபரம் !

விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம் தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான டோக்கன்களை வழங்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லிட்டர் டீசலை அந்நாட்டில் உள்ள நெல் விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு பயன்படுத்த இலவசமாக வழங்கியது.

இந்நிலையில் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்கனவே நாட்டின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

அதன்படி, இன்று முதல் அனைத்து விவசாயிகளும் நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous articleவவுனியாவில் மருமகனை தாக்க முற்பட்ட வேலை தலையில் பலத்த காயமடைந்த மாமியார்க்கு நேர்ந்த சோகம் !
Next articleயாழில் தனியார் சொகுசு பஸ் நடத்துநர் மீது தாக்குதல்!