முல்லைத்தீவில் வீதியில் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்த இரு இராணுவ வீரர்கள்!

கண்டி மற்றும் முல்லைத்தீவு இராணுவ முகாம்களில் கடமையாற்றும் இராணுவத்தினர் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியில் பயணித்த பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகையை பறித்துச் சென்ற வேளையில் தலத்துஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாமிலும் மற்றையவர் கண்டி இராணுவ முகாமிலும் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தலத்துஓயா பகுதியைச் சேர்ந்த பெண் வீதியில் பயணித்த போது, ​​அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேகநபர்கள் பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleயாழில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ! வெளியான தகவல் !
Next articleகிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து ! 11 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் !