வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பலியான மகனின் செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம்!

கிளிநொச்சியில் மகனின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாய் உயிரிழந்துள்ளார்.

நேற்று (02-03-2023) வவுனியா நெடுங்கேணி பகுதியில் பசுவுடன் மோதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் (01-03-2023) நடந்துள்ளது.

ராஜரத்தினம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று உயிரிழந்துள்ளார்.

இன்று (03-03-2023) தனது மகனின் மரணச் செய்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருவரது மரணச் சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளன.

Previous articleஇன்றைய ராசிபலன் 04/03/2023
Next articleஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!