இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இன்று (03-03-2023) நடைபெற்ற மத்திய வங்கியின் நாணயச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதங்களை 100 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து முறையே 15.50 சதவீதம் மற்றும் 16.50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சட்டப்பூர்வ கையிருப்பு விகிதத்தை தற்போதைய 4.00% அளவில் பராமரிக்க நாணய ஆணையம் முடிவு செய்துள்ளது.