கனடாவில் வசிப்போருக்கு வெளியன மகிழ்ச்சி செய்தி !

கனடாவின் டொரண்டோவில் வீடுகளின் விலை 18 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விலை குறைந்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​வீடுகளின் விலையில் 5 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

டொராண்டோ பிராந்திய ரியல் எஸ்டேட் கவுன்சில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஜனவரியில் சராசரி வீட்டு விலை $1038,390 ஆகவும், பிப்ரவரியில் $1095,617 ஆகவும் இருந்தது.

இந்நிலையில், வீடுகளின் விலை குறைந்து வரும் நிலையில், வீடு வாங்க காத்திருப்போர், விலை இன்னும் குறையும் என்ற நம்பிக்கையில், வாங்குவதை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பு!
Next articleதென்னிலங்கையில் முதலைகள் வாழும் ஆற்றில் திடீரென குதித்த பெண் !