ஜெர்மனியில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

ஜேர்மனியில் இலங்கையை சேர்ந்த 34 வயதான இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

உயிரிழந்த பெண் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், 12 வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் முடித்து ஜேர்மன் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண் ஓரிரு வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து , தென்னிந்திய குடும்பம் ஒன்றுடன் வீட்டின் மேற் பகுதியில் தனிமையில் அவர் வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் குறித்த பெண்ணின் உறவுக்காரர் ஜேர்மனியில் வசித்து வந்ததாகவும் அடிக்கடி அவர் உயிரிழந்த பெண்ணை சந்திக்க வருபவர் எனவும் , இந்திய குடும்பத்தவர்கள் பொலிசாரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்னின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக ஜேர்மன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Previous articleயாழில் 31 வயதான இளம் அரச உத்தியோதக்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!
Next articleயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய 4 வயது சிறுமியின் மரணம்!