தனியார் பேருந்தின் நடத்துநர் செய்த செயல்; குவியும் பாராட்டுக்கள் !

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர் தனது பேருந்தில் இருந்து காணாமல் போன 40,000 ரூபாய் கொண்ட பணப்பையை கண்டுபிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நேற்று (4) பிற்பகல் 3.30 மணியளவில் கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்தில் பணம் அடங்கிய பணப்பை ஒன்று காணாமல் போயுள்ளது.

பேருந்தின் நடத்துனர் ஷாம் குமார் பணப்பையை கண்டுபிடித்து உரிமையாளரிடம் இன்று (05) காலை ஒப்படைத்துள்ளார்.

கொழும்பு பிரதேசத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் போது தனது பணப்பையை இழந்ததாகவும் அதில் 40000 ரூபா பணமும் தேசிய அடையாள அட்டையும் இருந்ததாகவும் காணாமல் போன தனது பணப்பையை இழந்த பயணி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பயணி புஷ்பநாதன் கர்ணனும் காணாமல் போன பணப்பையை தன்னிடம் திருப்பிக் கொடுத்த நடத்துனருக்கு நன்றி தெரிவித்தார்.

Previous articleகுழந்தையை இறால் தொட்டியில் தள்ளி கொலை செய்த தாய் ! வெளியான காரணம் !
Next articleமாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது!