11 ஆண்டுகளாக அறையில் மனைவியை பூட்டி வைத்த சட்டத்தரணி !

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் வசிக்கும் வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவியை 11 ஆண்டுகளாக அறையில் அடைத்து வைத்திருந்தார்.

இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோதாவரி மதுசூதனன். இவர் அப்பகுதியில் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சாய் சுப்ரியா. சமீபத்தில் சுப்ரியாவின் தாய் மதுசூதனனிடம் சுப்ரியா எங்கே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் எதுவும் கூறவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுப்ரியாவின் தாயார், போலீசில் புகார் அளித்தார். பின்னர் மதுசூதனன் வீட்டிற்கு விரைந்து வந்த காவலர்களை உள்ளே செல்லவிடாமல் மதுசூதனன் தடுத்துள்ளார்.

இதையடுத்து சுப்ரியாவின் பெற்றோர் நீதிமன்றத்தை அணுகி வாரண்ட் பெற்று மதுசூதனன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, ​​அவரது மனைவி அந்த வீட்டின் அறையில் 11 ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது!
Next articleமேக்கப் போட்டதால் வந்த வினை – மணமகளுக்கு முகம் வீங்கியதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் !