திரைப்பட பாணியில் பிடிக்கப்பட்ட திருடி ! பொதுமக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !

நாட்டில் புதிய வழிகளில் கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இன்று (05.03.2023) காலை வத்தளையில் திரைப்பட பாணியில் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வீட்டு வேலைக்காக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடப்படும். இந்த விளம்பரங்களை நம்பி வீடுகளுக்குச் செல்லும் சிலர் வீட்டில் உள்ள பெறுமதியான ஆபரணங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் பல இடங்களில் திருட்டு வேலை செய்து வந்த பெண் ஒருவர் வத்தளையில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு வேலை தேடிச் சென்ற நிலையில் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் பொலிஸாரின் ஊடாக குறித்த பெண்ணை அறிந்த பொலிஸார் வீட்டின் உரிமையாளரின் உதவியுடன் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, தான் பல வீடுகளில் வீட்டு வேலை செய்து வருவதாகவும் கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அவர்களுடன் தொலைபேசி அழைப்புகளையும் மேற்கொண்டார்.

எனவே வீட்டுப் பணிப்பெண்கள் என்ற போர்வையில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி ஊடகவியலாளர் டில்சான் வின்சன் !

Previous articleதமிழர் பகுதியில் வீட்டொன்றினுள் புதையல் தேண்டிய மூவர் கைது !
Next articleஅவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்! !