அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெடரல் தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழன்! !

அவுஸ்திரேலியாவில் மே 27ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டாட்சித் தேர்தலிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பசுமைக்கட்சி சார்பில் சுஜன் என்ற தமிழ் இளைஞன் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மனித உரிமை செயற்பாடுகள், குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் குடிவரவு கல்வி நடவடிக்கைகளில் தமிழர்களுக்கு பூரண ஆதரவை வழங்கி வரும் சுஜன், சிட்னி மாகாண தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் அதிகளவான தமிழர்களைக் கொண்ட அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் சுஜன் சிறந்த சமூக மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது 15வது வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வதிவிடத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் 2015 ஆம் ஆண்டு முதல் பசுமைக் கட்சியில் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

பசுமைக் கட்சி சமூக நலச் செயற்பாடுகள், மனித உரிமை செயற்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்லும் கட்சியாக இருப்பதால் எமது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சியாக களம் இறங்கியுள்ளது என்றார்.

இதன் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய முடியும் என்றார்.

Previous articleதிரைப்பட பாணியில் பிடிக்கப்பட்ட திருடி ! பொதுமக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல் !
Next articleபாடசாலை மாணவர்களுக்கான சீறுடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !