யாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த  19 வயது இளைஞன்

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த 19 வயதினை உடைய இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் (05-03-2023)தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

குறித்த இளைஞன் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதிக்கு சென்று அங்கு கயிறு ஒன்றினை மரத்தில் மாட்டி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.அவரது கையில் சில வசனங்கள் எழுதப்பட்டுள்ளன இதனை பார்த்த பொலிசார் காதல் தோல்வியால் குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின்  உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

Previous articleயாழில் எனது நியூஸ் வரணும் என கையில் எழுதிவிட்டு தற்கொலை செய்த 19 வயது இளைஞன் !
Next articleயாழில் இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு சம்பவம் மேற்கொண்ட மர்ம கும்பல் !