யாழில் எனது நியூஸ் வரணும் என கையில் எழுதிவிட்டு தற்கொலை செய்த 19 வயது இளைஞன் !

யாழில் எனது நியூஸ் வரணும் என கையில் எழுதிவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலையானது காதல் தோல்வியால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் முன்வைத்துள்ளனர்.

இதனையடுத்து இளைஞரின் உடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleஇலங்கையில் இந்திய நாணயத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆலோசனை
Next articleயாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த  19 வயது இளைஞன்