யாழில் இளைஞர் ஒருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு சம்பவம் மேற்கொண்ட மர்ம கும்பல் !

யாழில் இளைஞர் ஒருவரை துரத்தி வாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ். அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் தொடர்ந்து முறுகல் நிலை காணப்படுவதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அச்சுவேலி நகருக்கு ஒரு குழுவைச் சேர்ந்த இளைஞன் வந்திருந்த நிலையில், மற்றைய குழுவினர் அவரை துரத்திச் சென்று வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில், பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் வாளால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous articleயாழில் தூக்கில் தொங்கி உயிரிழந்த  19 வயது இளைஞன்
Next articleயாழில் ஓட்டப் பந்தயத்தில் 75 வயது மூதாட்டியின் சாகசம்: குவியும் பாராட்டுக்கள்!