திடீரென குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா அதிகரித்ததன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை 5 முதல் 6 வரை குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏற்க்கனவே இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும்  ஒரு கிலோ சீனியின் மொத்த விற்பனை விலை 17 ரூபாவினால் குறைந்துள்ளதாகவும் சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Previous articleபாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்களுக்கு விசேட சலுகை
Next articleயாழில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு!