யாழில் மின்சாரம் தாக்கி 18 வயது இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் இன்று (05) மாலை உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று 5 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிடீரென குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை
Next article  யாழ் கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை பகுதியில் அநாதரவாக மீட்பு!