பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைவடையும் வாய்ப்பு!

தற்போது பாணின் விலை  150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதால் பாண் விற்பனை  100%  வீதமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன கூறியுள்ளார்.

பேக்கரி பொருட்களின் விலையினை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் குறிப்பிட்டுள்ளார் மேலும் மின் கட்டண அதிகரிப்பால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டு பேக்கரி தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே பாணின் விலையை குறைந்த பட்சம்  100 ரூபாயாக  குறைக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

https://youtu.be/0a6dzBB09Ik