பாணின் விலை குறைப்புத் தொடர்பில் வெளியாகியுள்ள அறவிப்பு!

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதன் மூலமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிற்துறையை புத்துயிர் பெற முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களின் விற்பனை 100% குறைந்துள்ளதாக இலங்கை அனைத்து பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பான் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்றார்.

இதேவேளை, பான் ஒன்றின் விலை 150, 160, 170 எனவும் சில பிரதேசங்களில் 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் விற்பனை நூறு வீதம் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே குறைந்தபட்சம் பான் விலை ரூ.100 ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அதுமட்டுமின்றி, மின்கட்டண அதிகரிப்பால், பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பேக்கரி தொழில் நலிவடைந்து வருவதாகவும் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.