யாழில் கோயில்களில் சங்கிலி அறுத்த ஆணும், பெண்ணும் கைது: யுவதி தலைமறைவு!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் இளவாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோயிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்ட நகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது.

திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் யுவதி தலைமறைவாகியுள்ளார்.

இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleயாழில் அநாதரவான நிலையில் மீட்கப்பட்ட ஹயஸ் ரக வாகனம் !
Next articleயாழிற்கு வரவுள்ள தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகி !