இலங்கையில் கையடக்க தொலைபேசி கடத்தல் அதிகரிப்பு!

இலங்கையில் பெருமளவிலான அளவிலான கையடக்கத் தொலைபேசி கடத்தல் இடம்பெறுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்திய பழுதடைந்துள்ள தொலைபேசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு திருத்தி புதிய தொலைபேசிகளாக விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்