புற்றுநோயை குணப்படுத்தும் உணவு வகைகள்!

மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பல வித நோய்கள் உள்ளன.

அவற்றுள் புற்றுநோயே மிகவும் கொடியதாக கருதப்படுகிறது. தற்போது விஞ்ஞான வளர்ச்சியில் இந்நோயை குணப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன.

எனினும் நாம் சாதாரணமாக உண்ணும் உணவு மூலமே இந்த புற்றுநோயை தடுக்கலாம் என்பது எவ்வளவு ஆச்சரியமான ஒன்று.

உணவு வகைகள் குறித்து தான் கிழே தரப்பட்டுள்ளது.

தக்காளி

நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் தக்காளியில் ஏராளமான விட்டமின் சி மற்றும் சிவப்பு நிறத்தை அளிக்கும் லைக்கொபின் உள்ளன. இவை இரண்டும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தவை.

பூண்டு

சிலர் உணவில் சேர்க்கப்படும் பூண்டை ஒதுக்கிவைத்துவிடுவர். ஆனால் பூண்டில் உள்ள பைத்தோ ரசாயனங்களுக்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது.

பூண்டை அளவுடன் உணவில் சேர்த்துகொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்று மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.

பெர்ரி

திரட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் பைத்தோ நியூட்ரியண்ட்ஸ் உள்ளன.

மேலும் புற்றுநோய் தொடர்ந்து பரவாமல் தடுக்கும் பொருட்களும் இதில் மிகுதியாக உள்ளன. எனவே தினமும் இவற்றை உணவில் சேர்த்துகொள்வது நன்று.

சிட்ரஸ் பழச்சாறு

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி ஆகிய பழங்களின் சாற்றில் நார்ச்சத்து,  விட்டமின், கனிமச்சத்துகள் ஆகியவை நிறைந்து உள்ளன.

இவை புற்றுநோய் உண்டாவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. மேலும் பல்வேறு நோய்களுக்கும் இந்த பழச்சாறு சிறந்த நிவாரணமாக உள்ளது.

ப்ராக்கோலி

காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக ப்ராக்கோலியில் அதிகளவு சுல்ஃபொரபைன் உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் சக்தியை உடலுக்கு அதிகளவு தரும் பொருளாகும்.

மேலும் புற்றுநோயை விரட்டும் சக்தியையும் உடலுக்கு தருகிறது. மார்பக புற்றுநோய், கல்லீரல், தோல் புற்றுநோய் ஆகியவையை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

மஞ்சள்

மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பொருள் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உடையது.

முந்திரி

முந்திரியில் உள்ள பைத்தோஸ்ட்ரோல்ஸ் என்ற கொல்ஸ்ட்ரால் போன்ற பொருள் உள்ளது. இது புற்றுநோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் வலிமையுடையது. குறிப்பாக மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த உணவாக விளங்குகிறது.

தேநீர்

தேநீரில் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக க்ரீன் டீ மற்றும் மூலிகை டீ-க்களில் நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் மிகுதியாக உள்ளன.

குறிப்பாக க்ரீன் டீ சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் அளவில் சக்தி உள்ளது.

ஒயின்

சிவப்பு ஒயினில் காணப்படும் Polyphenolகள் பலவகையான புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றன. மேலும் அதிலுள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகின்றன.

Previous articleஅஞ்சலியாக நடிக்கும் நடிகை ஷாம்லி
Next articleஐ.எஸ்.அமைப்புக்கு எதிரான விமான தாக்குதல்: முடிவுக்கு கொண்டுவர கனடா திட்டம்