சற்று முன் இடம்பெற்ற கோர விபத்தில் ! 22 பேர் கவலைக்கிடம் !

கொழும்பு – கண்டி வீதியில் மாவனெல்ல கனேகொட என்ற இடத்தில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவவுனியாவில் பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெற்றோர்! வெளியான காரணம் !
Next article2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!