யாழில் கோவில்களில் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட கும்பல் ஒன்றை மடக்கிபிடித்த பொலிஸார் !

யாழ்.மாவட்டத்திலுள்ள கோவில்களுக்குள் புகுந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கும்பலை இளவாலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இளவாலை – நுணசை சிவன்கோவிலில் நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஆலயங்களில் இடம்பெற்ற பல்வேறுபட்டநகை திருட்டுகளுடன் குறித்த கும்பலுக்கு தொடர்புள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது. இந்நிலையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஒரு ஆண் (வயது 26) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார். மேலும் திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.