யாழில் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

யாழில் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருகோணமலையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோவிலில் நடந்த உற்சவத்தில் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த மூவர் கொண்ட குழு ஒன்று குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருடப்பட்ட நகைகள் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியிலானது என இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இருவரை கைது செய்ததுடன் மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளார் கைதான இரு நபர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகுழந்தைகளுடன் புகையிரதம் முன்னாடி பாய்ந்த தாய்!! வெளியான காரணம் !
Next articleமட்டக்களப்பில் தோணி கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!