மட்டக்களப்பில் தோணி கவிழ்ந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு  – கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

நேற்று மாலை வழமை போன்று ஆற்றுப் பகுதிக்கு இறால் பிடிப்பதற்காக தோணியில் சென்று கொண்டிருந்த வேளை திடீரென வீசிய அதிகமான காற்றினால் தோணி ஆற்றில் கவிழ்ந்ததில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் நீரில் மூழ்கியுள்ளார்

நீரில் மூழ்கிய நபர் மீட்க்கப்பட்டு  மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleயாழில் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!
Next articleஇன்றைய ராசிபலன்08.03.2023