யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஆட்டிறைச்சி எலும்பு குருதிக்குழாயில் சிக்கியதில் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மட்டுவில் தெற்கு பகுதியில் வசிக்கும் லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா என்ற (46)வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார் ஆட்டிறைச்சியில் எலும்பு தொண்டைக்குழியில் சிக்கியுள்ளது ஆகையால் அவர் உடனடியாக வாழைப்பழத்தினையும் சாப்பிட்டுள்ளார்.
எலும்பு மார்பு பகுதி வரை இறங்கியுள்ளது மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியாசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட போது அவரது வாய் ஊடாக கமெரா செலுத்தி பார்க்க வேண்டுமென வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அதற்கு உடன்படாத குடும்பப் பெண் வீடு திரும்பியுள்ளார். இவ்வாறு இருக்க திங்கட்கிழமை குறித்த பெண் வாந்தி எடுத்த நிலையில் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்னர் வைத்தியர்கள் கமெராவை உட் செலுத்தி பார்த்த போது எலும்பு குருதிக் குழாயில் ஆட்டிறைச்சி எலும்பு குத்தியமையலேயே வாந்தி ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்