நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது.

அதற்கமைய , நேற்றைய தினம் (07-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 625,791.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களை விட நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று நேற்றைய தினம் 176,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,950.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,600.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Previous articleயாழில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு!
Next articleஇன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!