சி.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பண ஊழல் , தொடர்பாக யோசித கைதாகி இருந்தார். இன் நிலையில் அவர் தனது ஈமெயிலில் இருந்து வேறு திணைக்களங்களுக்கு முன்னர் அனுப்பிய ஈமெயில்களை கைப்பற்றிய இலங்கை புலனாய்வுத் துறையினர். பல விடையங்களை கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. பெருந்தொகைப் பணம் கைமாற்றப்பட்டு. அதனை வெள்ளையடிக்க அவர்கள் கார்ல்டன் தொலைக்காட்சியை பயன்படுத்தியுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யோசிதவின் காதலியான யசாராவும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும். அவரும் விரைவில் கைதாவார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இருப்பினும் யசாரா கொழும்பில் இல்லை என்றும் அண்டை நாடு ஒன்றுக்கு அவர் ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டதாகவும் ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இருப்பினும் யசாரா இலங்கையில் தான் இருப்பதாகவும். ஆனால் தலைமறைவாக இருப்பதகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.