கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பில் சற்றுமுன்னர் பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் பல்கலைகழக மாணவர்களுடன் பேராசிரியர்களும் இணைந்துள்ளனர் அத்தோடு நேற்றைய தினமும் கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Previous articleஇன்று நள்ளிரவு முதல் பாணின் விலை குறைப்பு!
Next articleஜனாதிபதி ரணிலின் மாமியார் காலமானார் !