இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும்

  தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதி ரூபாவிற்கு எதிராக வலுவடைந்த போதிலும் இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் மதிப்பீடுகள் கணித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இந்த வருட இறுதிக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும்  20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என Fitch Ratings தெரிவித்துள்ளது. இலங்கை நிலவரம் தொடர்பில் Fitch Ratings இன் இடர் ஆய்வாளர் Se Wang Tin கூறுகையில்,

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சர்வதேச நானயநிதியத்தின் நிதி உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் என கூறப்பட்ட போதிலும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் தொடர்ந்து இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பலவீனமடைந்த பொருளாதார நிலைமைகளால் இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390 ஆக குறையலாம் என ஃபிட்ச் கணித்துள்ளது. இலங்கை இன்னும் வெளிநாட்டு கடனை திருப்ப செலுத்தும் தேவைகளை கொண்டுள்ளது அத்தோடு  வரவிருக்கும் மாதங்களில் அதன் வெளிநாட்டு இருப்புக்களைக் கட்டியெழுப்ப வேண்டும், இது மாற்று விகிதத்தில் பாதகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleஅன்னாசி பழத்தின் விலை அதிகரிப்பு!
Next articleஇன்று நள்ளிரவு முதல் மற்றுமோர் விலை குறைப்பு!