விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் ஜனதிபதி பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
சிறைசாலைகளின் சட்டங்களின் படி சிறையில் இருக்கும் ஒருவர் சிறைசாலை அனுமதியுடன் மட்டுமே ஏதாவது தகவல்களை வெளியே அனுப்பமுடியும் இந்த நிலையில் ஞானசார தேரர் கடிதம் ஒன்றை சிறைச்சாலை அனுமதி இல்லாமல் வெளியே அனுப்பியள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் அவரை விசாரனை செய்யவும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறைச்சாலை ஊழியர்களுக்கும் எதிராக சிறைச்சாலைகள் பனிப்பாளர் நிஹால் றனசிங்ஹ விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்களில்
கைது செய்யப்பட்டுள்ள ஞானசார தேரரின் வழக்கு விசாரனை இன்று ஹோமாகம நீதிமன்றுக்கு விசாரனைக்கு வரவுள்ள நிலையில் சிறைச்சாலை விதிமுறைகளை மீறியமைக்கான விசாரனைகள் துவங்கியுள்ளன.