யாழில் சட்டவிரோதமாக உள் நுழைந்து வீடொன்றை உடைத்து தரைமட்டமாக்கிய பெண் உட்பட இருவர் அதிரடி கைது!

வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரில் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

ஜேசிபி இயந்திரம் மூலம் வீடு உடைக்கப்பட்டது தெரியவந்தது.

காணி உரிமைப் பிரச்சினையே இச்சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உடைப்பதற்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleயாழில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் இழிவான செயல்!
Next articleஉழவு இயந்திரத்தால் பறிபோன உயிர்; வயல் உழுத இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.!