இவ் வருடம் முதல் யூரியா விலை குறைக்கப்படும்

இந்த வருடம் முதல் யூரியா உரத்தின் விலை குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் உயர் பருவத்தில் 10,000 ரூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 தொடக்கம் 9000 ரூபா வரை குறைக்கப்படும் எனவும்

ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ ரி.எஸ்.பி அல்லது மண் உரம் வழங்க விவசாயத்துறை பரிந்துரைத்துள்ளதுடன் அதே அளவு உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

அத்துடன் பண்டி உரத்தின் விலை உயர்மட்டத்தில் உள்ளதால் அந்த உரத்தின் விலையை 10,000 ரூபாவாக குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.”என தெரிவித்துள்ளார்.

இதேவேளை அங்குனுகொலபெலஸ்ஸ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெறுவதற்காக திரண்டிருந்த விவசாயிகளை அமைச்சர் சந்தித்து அவர்களின் விவசாய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஇன்றைய ராசிபலன்14.03.2023
Next articleசுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப்படுள்ள சிக்கல்