வீடொன்றினுள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் கைது!

வீடொன்றினுள் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பிள்ளைகளின் புத்தக பைகளை வெளியில் வைத்து விட்டு பிள்ளைகளை வெளியில் விளையாடுமாறு கூறி வீட்டினுள் குறித்த நால்வரும் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இங்கிரியவின், ரம்புக்கனகம  மற்றும் அதனை சுற்றியுள்ள பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த சம்பவத்தின் போது பொலிசார் சுற்றி வளைப்பு மேற்கொண்ட வேளை நான்கு பெண்களும் பொலிசாரிடம் தப்பிக்க வீட்டின் மெத்தையின் கீழ் மறைந்திருந்த நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

Previous articleபுலமை பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த 12 வயது பாடசாலை சிறுமி பரிதாப மரணம்.!
Next articleதங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!