ஆண்களுக்கு மலட்டு தன்மையை ஏற்ப்படுத்தும் உணவுகள்

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் உணவுகள்

நவீன வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப மாறிவரும் உணவுப்பழக்கம், இரவு – பகல் பார்க்காமல் தொடர் வேலை போன்றவற்றின் காரணமாக ஆண்களுக்குகூட மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. இதன் தாக்கத்தால் உடலில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. மேலும், அதிக அளவிலான மன அழுத்தத்தின் காரணமாக, ஆண்களுக்கு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அல்லது பிட்யூட்டரி சுரப்பிகள், ஹைபோதாலமஸ், தைராய்டு சுரப்பிகள் மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் போன்றவற்றால் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகள் மலட்டுத் தன்மைக்கு வழி வகுக்க காரணமாக அமைகிறது.

மலட்டுத்தன்மை ஏற்பட காரணங்கள்

ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில்  போதை மருந்துகள், ஆல்கஹால் பயன்படுத்துவது மற்றும் அதிகப்படியான புகைபிடித்தல் போன்றவை கூட மலட்டுத் தன்மைக்கு காரணமாகிறது.

அதிலும், போதை மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தி குறைவாகவே காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஆண்கள்  இறுக்கமான ஆடை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதான்ல் விந்தணுக்கள் அதிக வெப்பமான சூழலுக்கு உள்ளாகும். அளவுக்கு அதிகமான உடல் பருமன் கூட ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணம் ஆகலாம். ஆண்களின் மலட்டுத் தன்மை சரி செய்ய எந்த மாதிரியான உணவினை எடுத்துக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டி உணவுகள்

துரித உணவுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மடிக்கணினிகளை பயன்படுத்தும்போது மடியில் வைத்து வேலை செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அதிக சூடு இருக்கும் இடங்களில் ஆண்கள் வேலை செய்வதும் உயிரணுக்களின் எண்ணிக்கையை குறைக்க வாய்ப்பு உள்ளது.