பதுளை,உத்ஹித்த பூங்காவில் காதல் ஜோடியொன்றை (22 வயதினர்) கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனை, பூங்காவின் காவலாளிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த காதல் ஜோடி, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன், குறிப்பிட்ட பெண்ணின் முன்னாள் காதலன் எனவும் தன்னை ஏமாற்றிவிட்டு புதிய காதலனுடன் சென்றதாலே தான் இவ்வாறு செய்ததாகவும் அந்த இளைஞன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.