யாழில் நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய 22 வயது பெண்ணும் தற்கொலை

யாழ்ப்பாணத்தில் நியூ மைதிலி மற்றும் சந்தோஷ் நகைக்கடையின் உரிமையாளர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரைத் தொடர்ந்து நகைக்கடையில் பணிபுரிந்த பெண்ணும் அதே நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். நாவாந்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் இன்று நகைக்கடைக்கு வரவில்லை. மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் நகைக்கடைக்காரர்களுக்கு தெரியவந்தது.

இதையடுத்து மதியம் 2 மணியளவில் தொழிலதிபர் மதிய உணவு சாப்பிட அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ஆனைப்பாண்டி நாவலர் வீதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கொழும்பில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு மரணங்களும் தொடர்புடையதா அல்லது தனித்தனி சம்பவங்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.