மயமான பாடசாலை மாணவனை தேடும் பெற்றோர்

பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை(4ஆம் பிரிவு) பகுதியில் வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மாணவன் பெத்தேகம பகுதியில் உள்ள சகோதர மொழிப் பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி பயின்று வந்த நிலையில் சம்பவ தினமன்று பெத்தேகம புரான மகா விகாரையில் நடைபெற்ற மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.

இறுதியாக அவர் சிவப்பு நிற மேற்சட்டையும், நீல நிற நீள் காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், ஊதா நிறப் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.

மேலும் மாயமான மாணவன் தொடர்பில் தகவல் அறிந்தோர் 0760178821, 0772405245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு மாணவனின் தந்தை மற்றும் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Previous articleஇன்றைய ராசிபலன்15.03.2023
Next articleலொட்டரி சீட்டில் கிடைத்த பணத்தை கொண்டு மனைவியின் தங்கையுடன் ஓட்டமெடுத்த 45 வயது நபர்