ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு விடுப்பு!

   இன்றைய தினம் நாடாளாவிய ரீதியில் பல தொழிற்சங்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையால் மக்களின் இயல்வு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் வழமை போன்று பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக கூறப்பட்டுள்ளது அத்தோடு  10 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் வழமை போன்று சேவையில் ஈடுபடுவதாகவும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில் பிற்பகலில் இருந்து அதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற ரயில் சாரதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தோடு அதற்க்கான விசேட அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் கூறியுள்ளார்.

அதேசமயம் சராசரியாக, ஒரு நாளைக்கு 370 முதல் 390 ரயில் பயணங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.