பிரான்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை; கதறும் தாயார்!

பிரான்சில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் காணாமல் போனதால் தாய் ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாக பிரான்ஸ் சென்று 10 வருடங்களின் பின்னர் அவரது மகன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரே ஒரு மகனே வாழ்க்கை ஆதாரமாக இருந்தது. குறித்த தாய் இந்தியாவில் தனியாக வசித்து வரும் நிலையில், மகன் பிரான்ஸ் சென்றுள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு பிரான்ஸில் வசிக்கும் தனது தமிழ் உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு விடுப்பு!
Next articleகைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!