கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

பிலியந்தலை சுவர்பொல வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைகள் துணியால் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

27 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவருடன் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு வந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (15) இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleபிரான்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை காணவில்லை; கதறும் தாயார்!
Next articleயாழில் வீடொன்றில் இடம்பெற்ற கொடூரம் ! இனந்தெரியாத நபர்களால் வந்த வினை !