யாழ் புறநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் மிரட்டல்!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தலை மேற்கொள்ளும் கும்பலை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்தவொரு கும்பல் மாணவர்களை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்துவது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பொலிசார் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு அவற்றை காணொளியாக பதிவேற்றி அதனை காண்பித்து மிரட்டி தமது இச்சைகளை தீர்த்து கொள்வதுடன் மிரட்டி பணமும் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் குறித்த கும்பலை இனம் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்

Previous articleகனேடிய சட்டத்துறையில் சாதனைப்படைத்த தமிழன்!
Next articleநிறைவுக்கு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள்