பொட்டு அம்மான் – தளபதி விதுஷா பேசிய வாக்கிடோக் உரையாடல் லீக்..!

vetu (1)2009 ஏப்பிரல் மாதம் ஆனந்தபுரத்தில் நடைபெற்ற பாரிய சண்டை தொடர்பாக அனைவரும் அறிந்திருக்கிறோம். அங்கே ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டார்கள்.

ஏப்பிரல் மாதம் 3ம் திகதி புலிகளின் மகளீர் அணி படைத் தளபதியாக இருந்த விதுஷா , முள்ளிவாய்க்காலில் நின்றிருந்த பொட்டு அம்மானோடு பேசியிருக்கிறார். வாக்கிடோக்கியில் நடந்த இந்த உரையாடலை ஊடுருவி ராணுவத்தினர் கேட்டுள்ளார்கள். அந்த உரையாடல் அடங்கிய ஒலி நாடா தம்மிடம் உள்ளதாகவும் , அதனை 5,000 வெள்ளி (சிங்கப்பூர் காசு) விற்பனை செய்வோம் என்றும் ராணுவத்தில் இருந்து தப்பிவந்த சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இவர்கள் புலம்பெயர் நாட்டில் உள்ள, பல ஊடகவியலாளர்களை தொடர்புகொண்டு இந்த உரையாடலை விற்பதற்கு பேரம் பேசி வருகிறார்கள். ஆனந்தபுரத்தில் கடும் தாக்குதல் நடைபெற்றவேளை , புலிகளிடம் இருந்த உணவு , குடி நீர் மற்றும் ஆயுதங்கள் தீர்ந்துபோய்விட்ட நிலையில் தளபதி விதுஷா பொட்டு அம்மானை தொடர்புகொண்டு அவற்றை அனுப்புமாறு அவசரமாக கோரியுள்ளார். ஆனால் பொட்டு அம்மானால் அன்றைய நிலையில் எதனையும் செய்ய முடியவில்லை.

சகல வழிகளும் அடைக்கப்பட்டு விட்ட நிலையில் , மிகவும் விரக்தியுற்ற நிலையிலிருந்த பொட்டு அம்மான், கிட்டத்தட்ட அழுகை வெடிக்கும் குரலில் தனது அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போய் விட்டன என்றும் தங்களால் இந்த தடையைத் தாண்டி ஊடுருவ நீங்கள் நிற்கும் பக்கம் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

இதுவே புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் கடைசி வோக்கி டோக்கி உரையாடல் என்றும் கூறப்படுகிறது. அதற்கு பின்னர் அவர் பெரிதாக எவருடனும் வாக்கியில் உரையாடவில்லை என்றும் கூறப்படுகிறது.

Previous articleTMVPக்கு தொடரும் சோதனை
Next articleஇளைஞனை செருப்பால் அடிக்கும் யுவதி