இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் ஜப்பான்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டுள்ள நிலையில் மிகவும் வறுமை நிலையில் வாழும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜப்பான் 1.8 மில்லியன் டொலரை யுனிசெப் நிறுவனத்திடம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

மேலும், இலங்கயில் 6 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட சிறுவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர்,மற்றும் சுகாதார மேம்பாட்டை வழங்கவும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்த செய்தியை யுனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous articleயாழில் வீட்டிலிருந்து மாயமான நபர் சடலமாக மீட்பு!
Next articleமரவெள்ளி கிழங்கின் விலை திடீர் அதிகரிப்பு!