நோய் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

லிஸ்டீரியா நோய் குறித்து சமூக வலைதளங்களின் பரவும் தகவல் உண்மையல்ல என நேற்றைய தினம் இடம்பெற்ற ஊகவியாளர் சந்திப்பில் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டில் இதுவரை லிஸ்டீரியா நோயால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.

அதோடு குறித்த நோய் குறித்து சமூகவலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு லிஸ்டீரியா நோயால் இரண்டு நோயாளர்கள் உயிரிழந்தனர் என கூறப்பட்டுள்ள நிலையில் அந்த நோயாளிகள் லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களா என்பது தெரியவில்லை என வைத்தியர் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நோய் தொற்று குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.அத்தோடு குறித்த நோய் தொற்றின் அறிகுறிகள் குறித்து அவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உணவின் மூலம் லிஸ்டீரியா நோய்த்தொற்று ஏற்படுவதுடன், வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் காய்ச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்

மேலும் சிலருக்கு லிஸ்டீரியா நோய் தாக்கிய பிறகு கோமா நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ள வைத்தியர், இந்த நோயைத் தடுக்க கைகளை கழுவுதல் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது என்று கூறியுள்ளார்